மட்டு போதனா வைத்தியசாலையில் நடந்த சம்பவம் : மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவில் உள்ள மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து அதனை பெட்டியில் வைத்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த 35 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயான சுகாதார சிற்றூழியர் நேற்று செவ்வாய்க்கிழமை (23) கைது செய்துள்ளதுடன் உயிரிழந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இது பற்றி மேலும் தெரியவருவதாவது
குறித்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வரும் சிற்றூழியரான பெண் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர் சம்பவ தினம் திங்கட்கிழமை (22) வழமைபோல வைத்தியசாலையில் கடமையாற்றி வந்துள்ளார்.
வயிறு வலிப்பதாக மலசலகூடத்தில் குழந்தை பெற்ற சிற்றூழியர்
இதன் போது அவருக்கு வயிறு வலிப்பதாக அங்குள்ள மலசல கூடத்திற்கு சென்று ஒருவருக்கும் தெரியாமல் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்து அதனை பெட்டி ஒன்றில் மூடி கட்டிலின் கீழ் மறைத்து வைத்துவிட்டு அங்கு கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு இரத்த போக்கு அதிகரித்ததையடுத்து அவரை அவதானித்த தாதியர் ஒருவர் அவரை விடுதியில் அனுமதித்த நிலையில் அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் குழந்தை பெற்றுள்ளதை கண்டறிந்ததை அடுத்து பெட்டி ஒன்றில் போட்டு மூடி கட்டிலின் கீழ் மறைத்து வைக்கப்பட்ட குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.
கணவருடன் மனக்கசப்பு
குறித்த சிற்றூழியரின் கணவரும் அந்த வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வருகிறார்.கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்பு காரணமாக கணவனை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் குறித்த பெண் கர்ப்பம் தரித்து முழுமையாக 38 வாரங்கள் கொண்ட 2 கிலோவும் 485 கிராம் நிறை கொண்ட பெண் குழந்தையை பிரசவித்துள்ளார் எனவும் தெரியவருகிறது.
அவர் கர்ப்பிணியாக இருப்பது அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் எவருக்கும் தெரியாது எனவும் இந்த நிலையில் அவர் குழந்தையை உயிருடன் பிரசவித்து பெட்டியில் போட்டு மறைத்து வைத்திருப்பதாகவும் கணவனுக்கு தான் அந்த குழந்தை பிறந்ததாகவும் கணவர் இரண்டாவது பிள்ளை தனக்கு பிறக்கவில்லை என அடிக்கடி தெரிவித்து வந்த நிலையில் இந்த குழந்தை பிறந்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
காவல்துறையினர் கைது
இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை குழந்தையின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் உயிரிழந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என பிரிந்துள்ள கணவன் தெரிவித்ததையடுத்து குழந்தையின் மற்றும் தந்தையுடைய இரத்த மாதிரியை பெற்று டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
