தெஹிவளை மிருகக்காட்சிசாலையால் கிடைத்த பெருந்தொகை
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
அதன்படி வருமானம் ஆண்டின் முதல் 40 நாட்களுக்கு 16,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும் இதன்மூலம் ரூபா 52 மில்லியன் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது..
பார்வையாளர்களை கவரும் வகையில்
செயல்பாட்டு இயக்குனர் எச்.ஏ.அனோமா பிரியதர்ஷனி, பார்வையாளர்களை கவரும் வகையில் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதுமையான திட்டங்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் என்பனவே பார்வையாளர்களின் அதிகளவான வருகைக்கு முக்கிய காரணம் என தெரிவித்தார்.
ஒட்டகச்சிவிங்கிகளுக்கு வழங்கப்படும் உணவை
மிருகக்காட்சிசாலையானது தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என்றும், விலங்குகளின் செயல்பாடுகளைப் பார்க்கவும் பறவைகள், மீன்கள், யானைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு மிருகக்காட்சிசாலையின் மேற்பார்வையில் வழங்கப்படும் உணவை மட்டுமே உணவளிக்க அனுமதிக்கப்படுவதாகவும் இயக்குனர் கூறினார்.
இதன் மூலம் பார்வையாளர்கள் விலங்குகளிடம் கருணை காட்டவும், செல்லமாக பழகவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |