இலங்கை உட்பட 3 நாடுகள் தொடர்பில் சர்வதேசத்திலிருந்து வந்த மோசமான அறிக்கை
இலங்கை உட்பட மூன்று நாடுகளில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா இறப்புகள் 15% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், தெற்காசிய பிராந்தியத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் இறப்பவர்களின் மொத்த எண்ணிக்கை வாரந்தோறும் குறைந்து வருகின்றதாகவும் உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால், இலங்கை உட்பட மூன்று நாடுகளில் கொரோனா இறப்புகள் 15% அதிகரித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் இறப்பு எண்ணிக்கை 19% அதிகரித்துள்ளது, டிமோர்-லெஸ்ட் மற்றும் இந்தியாவில் முறையே 32% மற்றும் 17% அதிகரித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகின்றது.
இதேவேளை, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த காலக்கட்டத்தில் 14,000 புதிய இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
எனினும் தெற்காசிய பிராந்தியத்தில் முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இது 20% ஒப்பீட்டளவில் குறைவு என்றும் தெரிவிக்கப்படுகின்றது.