உலகளவில் அதிகரித்துள்ள விமானப் பயணிகளின் தேவை
World
By Dilakshan
வடக்கு கோடைகால சுற்றுலாப் பருவம் தொடங்கியவுடன் ஜூன் மாதத்தில் உலகளாவிய விமானப் பயணிகளின் தேவை ஆண்டுக்கு 9.1% ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின் படி இது தெரியவந்துள்ளது.
அதன் படி, ஜூன் மாதத்தில் விமானப் பயணிகளின் தேவை 8.5% வருடாந்திர வேகத்தில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச போக்குவரத்து
இதேவேளை, சர்வதேச போக்குவரத்து ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.3% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வருடத்தை விடவும் சுமை காரணி 0.5 % வீதம் உயர்வடைந்து 85% ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்த IATA இயக்குநர், இவ்வாறு சுமை காரணி அதிகரிப்பது நல்லது மற்றும் சவாலாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்