தங்கவிலை புதிய வரலாற்று உச்சம்! விமான திருடர்களால் தமிழ் வீடுகளிலும் அச்சம்!
உலகசந்தையில் தங்கத்தின் விலை இன்னொருவரலாறு காணாத புதிய உச்சத்தை நேற்று எட்டியதுடன் (ஒரு அவுன்ஸ் 4,689 அமெரிக்க டொலர்) கடந்த ஆண்டில் இருந்து 60 சத வீதத்துக்கும் அதிகமான விலை உயர்வையும் பெற்றுள்ளது.
தங்கத்தின் இந்த வரலாற்று உச்சவிலை மறுபுறத்தே தங்க திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களையும் அதிகரிக்க வைத்துள்ளது.
இதன்அடிப்படையில் புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழர்களின் வீடுகளில் தங்கத்தை குறிவைத்து நடத்தபடும் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கையும் அதன் நூதன முறைகளும் அதிகரித்து வருகின்றன.
விமான மார்க்கமாக வரும் திருடர்கள்
பிரித்தானியா போன்ற நாடுகளில் இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபடவென கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து திருடர்கள் விமான மார்க்கமாக வரும் அதிர்ச்சிச்செய்திகளும் வந்துள்ளன.

இந்தவகையான திருடர்கள் தாம்; பிரித்தானியாவில் தரை இறங்கிய அதே நாளிலேயே தமது கைவரிசையை தமக்கு உதவும் மூன்றாம் தரப்பினருடன் இணைந்து பல வீடுகளில் தொடர்ச்சியாக செய்த பின்னர் அதேநாளில் மீண்டும் நாட்டில் இருந்து வெளியேறிவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு திருட்டுகளை செய்தபின்னர் ருமேனியாவுக்கு பயணிக்க முயன்ற சேர்ந்த அண்மையில் பேர்மிங்காம் விமான நிலையத்தில் பிடிபட்ட பின்னர் இந்தவகை நூதன திருட்டுகள் அம்பலத்துக்கு வந்துள்ளன.
தமிழர்களின் வீடுகள் இலக்கு
குறித்த இருவரும் கடந்த வருடம் பிரான்சிலிருந்து வாகனம் ஒன்றில் பிரித்தானியாவுக்கு பயணித்த 24 மணி நேரத்திற்குள் வீடுகளில் திருட்டுகளை நடத்திய விடயமும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழர்களின் வீடுகளை குறிவைத்து திருடும் இவ்வாறான குழுக்களுக்கு குறித்த வீடுகள் தொடர்பான தரவுகளை வழங்கும் மூன்றாம் தரப்பில் தமிழர்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர உயர புலம்பெயர்நாடுகளில் தமிழர்களின் வீடுகளில் தங்கத்தை குறிவைத்து நடத்தப்படும் திருட்டுசம்பங்களும் சங்கிலி அறுப்புகள் உட்பட்ட வழிப்பறிகொள்ளைகளும் அதிகரித்துவருவது வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சேவைகளை நாடும் சந்தர்ப்பங்களை அதிகரிக்கவைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |