கொழும்புக்கான விமான சேவைகளை விரிவுப்படுத்தும் முக்கிய நாடு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
இதன்படி, ஜனவரி 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று புதிய பகல்நேர விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இலங்கைக்கும் விமான நிறுவனத்தின் உலகளாவிய வலையமைப்பிற்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
10 வாராந்திர விமானங்கள்
புதிய பகல்நேர சேவைகள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குகின்றன. கூடுதலாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இப்போது கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையே மொத்தம் 10 வாராந்திர விமானங்களை இயக்குகிறது.

Image Credit: AeroTime
விரிவாக்கப்பட்ட அட்டவணை பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்கும் என்றும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் சர்வதேச வழித்தட வலையமைப்பில் உள்ள இடங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இலங்கைக்கு சேவை செய்யும் ஒரு முக்கிய விமான நிறுவனமாகும், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் வழியாக ஆசியா, அவுஸ்ரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை இணைக்கும் பயணிகளுக்கு கொழும்பு ஒரு முக்கியமான நுழைவாயிலாக செயல்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |