கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
infections
increase
By Vanan
இலங்கையில் இன்று 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா( Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 521,218 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 13,102 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 18,076 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 477,374 ஆக அதிகரித்துள்ளது.