பொருட்களின் விலை அதிகரிப்பு - ஆளும் தரப்பு எம்.பி விடுத்த அவசர கோரிக்கை
பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சிரமத்தில் உள்ளதாகவும், பொருட்களின் விலை குறித்து அரசாங்கம் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராச்சி(Jagath Kumara Sumitraachi) தெரிவித்தார்.
பொருட்களின் விலை உயரும் பிரச்சினையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பொருட்களின் விலைகள் இப்படி உயர்ந்தால், அவை எங்கே முடிவடையும் என்று யோசிக்க முடியாது, பொருட்களின் விலையை வாங்க முடியாதவர்களுக்கு அரசாங்கம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றார்.
குறைந்த வருமானம் பெறுபவர்கள், குறிப்பாக சமுர்த்தி பெறுபவர்கள், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் கடுமையான சிக்கலை எதிர்கொள்வார்கள் என்று கூறினார்.
தான் அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்தாலும், நாட்டு மக்கள் விலை அதிகரிப்பினால் பொருட்களை வாங்குவது கடினம் என்று அவர் கூறுகிறார்.
கொரோனா தொற்றுநோயால் மக்கள் தங்கள் பல எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது சில அதிருப்தி இருப்பதை உணர்ந்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.