நாட்டில் அதிகரிக்கும் சுவாச நோய்கள் : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் (Sri Lanka) தற்போது சுவாச ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க (Neranjan Dissanayake) தெரிவித்துள்ளார்.
சுவாசப்பிரச்சினைகள் குறித்து சிறுவர்கள், கர்பிணித்தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட அவர், “முன்பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்களுக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களினூடாக அவர்களின் வீட்டில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் இந்த நிலை பரவக்கூடும்.
அவதானமாக இருத்தல்
அத்துடன், வீடுகளில் இருக்கும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
சிறுநீரக பாதிப்பு, நீண்ட கால நோய்களுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் தற்போதைய காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் காற்றின் மாசுபாடு தாய்மார்களின் கருவைக்கூட பாதிப்படையச் செய்யும் என்ற அதிர்ச்சி தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)