அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு: வெளியான மகிழ்ச்சி தகவல்
Sri Lanka
Government Of Sri Lanka
Money
By Shalini Balachandran
பிரதேச செயலாளர் உட்பட பல பதவிகளுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை மாகாண சபைகள் உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவிப் பணிப்பாளர் மற்றும் கணக்காளர் ஆகிய பதவிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலதிக கொடுப்பனவு
இந்த மேலதிக கொடுப்பனவுகளை இம்மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி