முப்படை வீரர்களின் தினசரி உதவித்தொகை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம்
Sri Lanka
Ministry of Defense Sri Lanka
By Beulah
முப்படை வீரர்களின் தினசரி உதவித்தொகை 1500 ரூபாவாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் முப்படைகளின் தளபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு ராணுவ அதிகாரியின் தினசரி உதவித்தொகை 1950 ஆகவும், மற்ற பதவிகளுக்கு 1500 ஆகவும் உள்ளது.
கொடுப்பனவு
அத்துடன். கடற்படை அதிகாரியின் கொடுப்பனவு 2000 மற்றும் விமானப்படை அதிகாரியின் கொடுப்பனவு 1976 ஆகும்.
அதேசமயம், கடற்படை மற்றும் விமானப்படையின் மற்ற பதவிகளுக்கு ஒரு நாளைக்கான கொடுப்பனவு 1550 ஆகும்.
சில மாதங்களுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு ரூ.640 ஆக இருந்த இந்த உதவித்தொகை பின்னர் ரூ.960 ஆக உயர்த்தப்பட்டது.
தற்போது அதனை 1500 ஆக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி