இலங்கையில் தீவிர சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு
இலங்கையில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரம் அதிகரித்துள்ளது என்று சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் கொரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையும் இந்த வாரத்தில் அதிகரித்துள்ளன என்றார்.
கடந்த வாரம் 149 கொரோனா மையங்கள் இருந்தன, இந்த வாரம் 168 ஆக அதிகரித்துள்ளன.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கடந்த வாரம் 60 ஆக இருந்ததாகவும், தற்போது அது 70 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாடு முழுவதிலும் இருந்து நேற்று பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2859 ஆகும். இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் (608) பதிவாகியுள்ளனர்.
கொழும்பிற்கு அடுத்த படியாக கம்பஹா மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் (547) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.