இரண்டு வாரங்களின் பின் இரு மடங்காக அதிகரித்த கொரோனா நோயாளிகள்! வைத்தியர் திடுக்கிடும் தகவல்
corona
sri lanka
press meet
By Shalini
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (ஜூலை 19) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சுமார் 100 கொரோனா நோயாளிகள் இருந்தனர்.
இப்போது அது 200 ஆக உயர்ந்துள்ளது என்றும் திசாநாயக்க தெரிவித்தார்.
மேலும், அந்த 200 நோயாளிகளில் 100 நோயாளிகள் ஆக்ஸிஜனின் உதவியை பெறுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், இதற்கான சரியான காரணத்தை கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி