கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும்19 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 06 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 பேரும், 30 வயதுக்கும் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 07 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை14,771 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,இன்று மேலும் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 295 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 557,621ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 579,685ஆக அதிகரித்துள்ளது.