பொதுமக்களுக்கு மற்றுமொரு பேரிடித் தகவல்! அதிகரிக்கப்படவுள்ள கட்டணம்
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும், 2014ஆம் ஆண்டு 25 வீதத்தால் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடாக அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதன்பின், பொதுப் பயன்பாட்டு ஆணையம், பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் ஆராய்ந்தபின், மின் கட்டணத்தை உயர்த்துவதா அல்லது மானியம் வழங்குவதா என்ற தீர்மானம் எட்டப்படவுள்ளது
மேலும், மின் கட்டணம் உயர்த்தப்படுவதும் அல்லது தற்போதைய நிலைமையிலேயே தக்கவைப்பதும் அரசாங்கத்தின் பதிவிலே அடங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
