பாதுகாப்பான ஸ்டிக்கர்களால் அதிகரித்த மதுவரி வருமானம்
Ranjith Siyambalapitiya
Excise Department of Sri Lanka
By Sumithiran
மதுவரி வருமானம் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மது பாவனை குறைந்துள்ள போதிலும் கடந்த 10 மாதங்களில் இந்த நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஸ்டிக்கர்
மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தீர்மானித்ததன் காரணமாக இந்த மதுவரி வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கு அமைவாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பாதுகாப்பு ஸ்டிக்கரால் போலி மது பாவனை முற்றாக தடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், குறித்த ஸ்டிக்கரில் பல இரகசிய அடையாளங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்டிக்கர் போலியானதா என்பதை கண்டறியும் கருவிகள் கலால் திணைக்களத்திடம் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி