புதுவருடத்தில் மக்களுக்கு அதிர்ச்சி தகவல் - அதிகரித்தது கோதுமை மாவின் விலை
srilanka
price
new year
wheat flour
By Sumithiran
எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடப்பிறப்பில் இலங்கையில் மீண்டும் விலை அதிகரிப்புகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை கோதுமை மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ள நிலையில், வௌி மாவட்ட சந்தைகளில் பல்வேறு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
5ம் ஆண்டு நினைவஞ்சலி