கடவுச்சீட்டு கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு - விபரம் இணைப்பு
Department of Immigration & Emigration
Passport
Sri Lanka Budget 2023
By Vanan
கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் சேவைக் கட்டணம்
இதன்படி, கடவுச்சீட்டு வழங்குவதற்கான சாதாரண சேவைக் கட்டணம் 5,000 ரூபாவாகவும், ஒரு நாள் சேவைக்குரிய கட்டணம் 20,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெளிநாட்டு கடவுச்சீட்டை பெறுவதற்கு, சாதாரண சேவைக்கு 3500 ரூபாவும், ஒரு நாள் சேவைக்கு 15,000 ரூபாவும் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தினால் கட்டணமாக அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கட்டண அதிகரிப்பு விபரங்கள்

