வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு
வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்தள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோய் தாக்கத்தின் அதிகரிப்பு தொடர்பில் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீரிழிவு நோயின் தாக்கம்
“மிக அண்மைய தரவுகளின் படி கொழும்பு மாகாணத்தில் குறிப்பாக மேல் மாகாணத்தில் 30% மானவர்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கம் காணப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 15% சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கம் காணப்படுகின்றது.
நீரழிவு நோய் தொடர்பிலான ஆய்வுகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.
குறிப்பாக கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக இந்த கொவிட் காலப் பகுதியில் இளைஞர் யுவதிகள் அதாவது 20 - 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை பிரிவை எடுத்துக் கொண்டால், கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் புதிதாக பதிந்திருக்கின்றார்கள்.
நீரிழிவு விழிப்புணர்வு வாரம்
அதாவது நீரிழிவு நோயின் தாக்கமானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்வதனை காணக்கூடியதாகவுள்ளது.
வட பகுதியில் உள்ள மக்கள் இந்த நீரிழிவு நோய் தொடர்பில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
நவம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகின்றது.
இந்த உலக நீரிழிவு விழிப்புணர்வு வாரத்தில் யாழ். மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது” - என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
