காவல்துறையினரால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு: சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டு
காவல்துறையினரின் செயற்பாடுகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
அத்தோடு, அரசாங்கம் குறித்த விடயங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் போது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாரம்மலவில் காவல்துறையினரின் நடவடிக்கையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
விமர்சனங்கள்
அதேவேளை, குற்றச்செயல்களிற்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் விதம் குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அதனை தொடர்வதில் உறுதியாக இருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் , போதைப்பொருள் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு எதிராக அவசியமான சட்ட நடைமுறை நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இவற்றை உரிய சட்ட நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |