இந்திய அணியின் பந்து வீச்சால் கதி கலங்கிய இலங்கை அணி
புதிய இணைப்பு
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இலங்கை அணியின் இன்னிங்ஸில் குசல் ஜனித் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசங்க, அணித்தலைவர் தசுன் ஷனக, மதிஷா பத்திரன ஆகியோர் ஓட்டங்கள் ஏதுமே எடுக்காமல் வெளியேறினர்.
சிறப்பாக பந்துவீசிய மொஹமட் சிராஜ் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதலாம் இணைப்பு
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறுகின்றது.
இந்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சி
கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன் படி இலங்கை அணியானது முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.