சுதந்திரதின நிகழ்வில் முக்கிய தலைவர்களுக்கு குறி..! டெல்லியில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு
Narendra Modi
Delhi
India
By Kiruththikan
பயங்கரவாத அமைப்பு
டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை தயாராக இருக்குமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் சுதந்திர தின நிகழ்வின் ஏற்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்ற நிலையில் சுதந்திரதினத்தன்று டெல்லியில் இந்திய பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து சுதந்திரதின உரையாற்றவுள்ளார்.
இந் நிலையில் உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் படி சில பயங்கரவாத அமைப்புகள் டெல்லி நகரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முக்கிய தலைவர்களை குறி வைத்து தாக்கத் திட்டம்
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பினர் சில முக்கிய தலைவர்களை குறி வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து டெல்லி முழுவதும் முழு எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சந்திரிகாவின் இனப்படுகொலைகளுக்கு அநுரவும் பொறுப்புக்கூற வேண்டும்! 54 நிமிடங்கள் முன்
