இறுதிக் கட்டத்தில் பிள்ளையானின் விசாரணை: சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த சிவநேசத்துரை சந்திரக்காந்தன் (பிள்ளையான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னதாக அறிந்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்திருந்தார்.
குறித்த விடயத்தை நேற்று (10) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டிருந்தார்.
2019 ஆம் ஆண்டு நான்காம் மாதம் 21 ஆம் திகதி ஒட்டுமொத்த இலங்கையையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிலை குலைய வைத்திருந்த குறித்த தாக்குதலில் 274 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமைந்திருந்தனர்.
இந்தநிலையில், குறித்த தாக்குதல் அறிக்கை தொடர்பில் அமைச்சர் பலதரப்பட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல கருத்துக்களை வெளிப்படுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் (பிள்ளையான்) நெருங்கிய சகபாடியான ஹன்சிர் அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து விசாரிக்க தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பான பின்னணியினையும் மற்றும் அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பிலும் விரவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
