யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பை நோக்கிய எழுச்சி பேரணி - இன்றைய பதிவுகள்
Sri Lankan Tamils
Batticaloa
Jaffna
Black Day for Tamils of Sri Lanka
By Vanan
இலங்கைத்தீவின் இனமுரண்பாட்டை உள்ளூரிலும் தமிழ்மக்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் பகிரங்கமாக வெளிப்படுத்தும் வகையில் சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திரதின நாள் இன்று கடந்து வருகின்றது.
இன்று காலை சிறிலங்கா தலைநகர் கொழும்பில் பிரதான சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்ற அதே சமகாலத்தில், தமிழர் தாயகப்பகுதியில் நீதிகோரும் போராட்டங்கள், பணிப்புறக்கணிப்பு மற்றும் இயல்புவாழ்வு முடக்கத்துக்குரிய வகையில் இந்தநாள் இருந்தது.
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பை நோக்கிய பேரணியின் ஆரம்பத்தில் தமிழ்மக்களின் நீதிக்கான தார்மீக கோரிக்கை மற்றும் அறவழி சீற்றம் வலுவாக இருந்தது.
இந்தப் பேரணிகளின் பதிவுகளை கீழேயுள்ள காணொளிகளில் நீங்கள் பார்க்கலாம்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி