சட்டத்தரணிகள் குழுவுடன் கோட்டாபயவை சந்திக்கச் சென்ற மகிந்தவின் நெருங்கிய இந்திய நண்பன்!
இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 15 ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பரான சுப்ரமணியன் சுவாமி சிறிலங்கா வந்துள்ளார்.
"Once a Professor, Always a Professor"
— Dharma (@Dharma4X) September 29, 2022
In all photos, I find Dr. @Swamy39 Ji carrying an ink pen with him.. We don't know the pen brand.. pic.twitter.com/iWXOOJweZD
இதன் போது மகிந்தவின் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பிரதம அதிதியாக சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கலந்துரையாடல்
இந்நிலையிலேயே இன்று முன்னாள் அதிபர் கோட்டாபயவை சந்திக்க சட்டத்தரணிகள் அடங்கிய குழுவுடன் அவர் சென்றிருந்தார்.
அத்துடன் சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் அவர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dr @Swamy39 and team with the new Sri Lankan PM Mr Dinesh Gunawardena in Colombo on wide range of Consultation @jagdishshetty @satyasabharwal @vishesh_kanodia #SubramanianSwamy pic.twitter.com/tVSO1EJPxj
— Tejas (@NAVANGULTEJAS) September 29, 2022




