பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் முடக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.
ஜம்மு - காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிரான நடவடிக்கைகளில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
மேலும், இந்திய மக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்களை விடமாட்டோம் என்றும், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால், எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இந்தியாவில் தடை செய்வதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
நேற்று (02.05.2025) முடக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோரின் கணக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி, டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத், வேகப்பந்து வீச்சாளர்களான ஹசன் அலி மற்றும் நசீம் ஷா, பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் மற்றும் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் ஆகியோரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பாகிஸ்தான் நட்சத்திரங்கள் சோயிப் அக்தர் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோரின் கணக்குகளும் இதில் அடங்கும்.
இந்தியாவில் இருந்து தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுக முயற்சிக்கும் பயனர்கள் 'இந்தியாவில் கணக்கு இல்லை' என்பதைக் காண்கிறதாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
