கொழும்பை கடுமையாக கண்காணிக்கும் இந்தியா! பின்னணி என்ன?
சீனாவின் ஆதரவுடன் கொழும்பு போர்ட் சிட்டி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியா தமது கருத்தை மீண்டும் தெரிவித்துள்ளது.
இணையம் ஊடக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த திட்டம் குறித்து கேட்ட போது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி, கருத்துரைத்தார்.
இந்தியா தனது பாதுகாப்பு கண்ணோட்டத்தில் கொழும்பின் சமீபத்திய முன்னேற்றங்களை நெருக்கமாக கவனித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுக நகரத்திற்கான கட்டமைப்பின் பல அம்சங்கள் குறித்து இலங்கையில் எழுப்பப்பட்டுள்ள கவலைகளையும் இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
சீனாவுடன் மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டங்களின் போது, இந்தியாவுடன் கடல்சார் பரஸ்பர பாதுகாப்பு உட்பட இந்தியாவுடன் உள்ள சிறந்த இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை மனதில் வைத்திருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பாகி கூறினார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,