இலங்கையில் உச்சபட்ச நெருக்கடி - இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
India
By Vanan
சர்வகட்சி கூட்டம்
இலங்கை குறித்து ஆராய இந்தியா சர்வகட்சி கூட்டத்தை கூட்டவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடர்பில், ஆராய்வதற்கே இந்திய அரசாங்கம், சர்வகட்சி கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கூட்டமானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெறவுள்ளது.
தமிழகத்திற்கு ஏதிலிகளாக செல்பவர்கள் குறித்தும் ஆலோசனை

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் விபரமளிப்பர் என குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு, தமிழகத்திற்கு ஏதிலிகளாக செல்பவர்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக இந்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரல்ஹாட் ஜோசி தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி