ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கும் எடப்பாடி : சூடுபிடிக்கும் மக்களவை தேர்தல் களம்
திமுக குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பிலும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் ஆதரவாளரான அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு உரையாற்றியுள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் களம் சூடுபிடித்துள்ள நிலையில் நாடு முழுவது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதில் தமிழக அரசியல் காட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கள்ள கூட்டணி
எடப்பாடி பழனிசாமி தனது உரையில், “ முதல்வருக்கு தில், தெம்பு, திரானி உள்ளதா. கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்தத் திட்டங்கள் குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா. இடத்தைச் சொல்லுங்கள்.நானே வருகிறேன்.
நாங்கள் பாஜகவை பார்த்து பயப்படுவதாக ஸ்டாலின் சொல்கிறார்.
இந்தியாவில் எந்தக் கட்சிக்கும் பயப்படாத கட்சி அதிமுக. அப்பாவும், மகனும் (ஸ்டாலின், உதயநிதி) பிரதமர் மோடியை 7 முறை தமிழ்நாடு அழைத்து வந்தனர்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது கோ பேக் மோடி. ஆளுங்கட்சியானவுடன் வெல்கம் மோடி. நீங்கள் மோடியை எதிர்க்கிறீர்களா. நாங்களே கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டோம். எதற்கு கள்ள கூட்டணி என்று விமர்சிக்கிறீர்கள்.
ஸ்டாலின் நடிப்பு
அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. நாங்கள் கூட்டணியை விட்டு வந்தால் உங்களுக்கு ஏன் எரிகிறது. நடிகர் திலகம் இப்போது உயிருடன் இருந்திருந்தால், ஸ்டாலின் நடிப்பைப் பார்த்து மயங்கி விழுந்திருப்பார்.
ஆன்லைன் ரம்மி நிறுவனத்துடன் கூட பணம் வாங்கிய கட்சி திமுக. சின்ன திருடன், பெரிய திருடனை பார்த்து கேட்பது போல இருக்கிறது திமுகவின் செயல்பாடு. 10 ரூபாய் பாலாஜி பாதுகாப்பாக உள்ளே இருக்கிறார். இல்லையென்றால் கோவையை அழித்திருப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |