தேநீர் விநியோகம் செய்தே வளர்ந்தேன்: பேசுப்பொருளாக மாறியுள்ள மோடியின் தேர்தல் பிரச்சாரம்
சிறு வயதில் தட்டுகளையும், கோப்பைகளையும் கழுவி தேநீர் விநியோகம் செய்து தான் வளர்ந்தேன் எனவும் எனக்கும் தேநீர்க்குமான உறவு மிக ஆழமானது என்று இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பேசியுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற கட்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாரதத்தில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.
இந்திய தேர்தல் களம்
இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே மீதமுள்ள நிலையில் எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஒரே ஒரு கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் இந்தியாவின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.
மத்திய பகுதியை ஆளும் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெல்ல வெண்டும் என்ற இலக்குடன் தனது பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், பா.ஜ.கவை ஆட்சியில் அமரவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
