சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீன கப்பல் விவகாரம் - அடுத்த கட்ட நகர்வில் இந்தியா
ரணிலிடம் சென்றது இந்தியா
இலங்கையில் ஆய்வுகளை மேற்கொள்ளும் வைகையில் வருகை தரவுள்ள சீன கப்பல் தொடர்பில் இந்தியா தனது கவலையை எழுப்பியிருந்தது.
எனினும் இந்தியாவின் கவலைக்கு மத்தியிலும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு அந்த கப்பல் வந்து ஐந்து நாட்கள் ஆய்வினை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி
இந்தியா தனது தெளிவான கரிசனையை வெளியிட்ட போதிலும் சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் இலங்கை வரும் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ள நிலையிலேயே இந்தியா தனது கரிசனையை அதிபர் ரணிலிடம் வெளியிட்டுள்ளது என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அதிபர் அலுவலகமோ கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடாத போதிலும் இந்த விடயம் குறித்த தனது கரிசனையை இந்தியா மிக உயர்மட்டத்தில் வெளியிட்டது என இந்த விவகாரங்கள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன என இந்து நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.
