இந்தியாவை சூழ்ந்து கொண்ட பேராபத்து! கன்னியாகுமரி அருகே முகாமிட்டுள்ள சீனா
இலங்கையில் சூரிய மின்சக்தி திட்டங்களை செயல்படுத்த இந்தியா 100 மில்லியன் டொலரை கடனுதவியாக வழங்கியமைக்கு இந்தியாவில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோப்பால் பாக்லே ஆகியோர் இதற்கான உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.
இந்த நிலையில், இலங்கையில் சீனாவின் அடுத்தடுத்த ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பது பற்றி எதுவும் பேசாமல், இப்படி இலங்கைக்கு கடனுதவிகளை வாரி வழங்குவது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி, காயப்படுத்தும் செயல் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர்.
கன்னியாகுமரி அருகே சீனா முகாமிட்டிருக்கிறது. அதாவது இலங்கையே சீனாவின் காலனி நாடாகிக் கொண்டிருக்கிறது என தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்திய அரசை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என சீனா வலுவாக காலூன்றி நிற்கிறது. இலங்கையில் சீனாவுக்கு சுயாட்சி பிராந்தியமாக துறைமுக நகரம் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் ராமேஸ்வரத்துக்கு அருகே உள்ள தீவுகளில் இந்தியா கேட்டிருந்த காற்றாலை திட்டங்களை சீனாவுக்கு வழங்கி இருக்கிறது இலங்கை.
இந்த நடவடிக்கைகளால் இந்தியாவின் தெற்கு எல்லைக்கு சீனாவால் பேராபத்து காத்திருக்கிறது என்பதுதான் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் எச்சரிக்கை.
இவ்வாறான நிலையில், இலங்கையில் சீனாவின் அடுத்தடுத்த ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பது பற்றி எதுவும் பேசாமல் இலங்கைக்கு கடனுதவிகளை வாரி வழங்குவது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி, காயப்படுத்துவதுதான் என்பதும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு முட்டுக் கொடுத்து கொண்டிருக்காமல் இந்தியாவை சூழ்ந்திருக்கும் சீனாவின் பேராபத்தை உணர்ந்தேனும் ஆக்கப்பூர்வமான வலிமையான வெளியுறவு நடவடிக்கையைத்தான் மத்திய அரசு எடுத்தாக வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.