சந்திரயான் 03 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கு தயாராகிவரும் இந்தியா
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ - நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்கு அனுப்பிய சந்திரயான் 03 திட்டத்தை தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான விண்கலமொன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி தனது ஆய்வுப் பணியைத் முன்னெடுத்து வருகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,
நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றிகரமான தரையிறக்கம் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தயார் நிலையில் ஆதித்யா எல்-1
இந்தநிலையில் சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதற்கமைய பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி ஒன்றில் இவ் விண்கலம் நிலைநிறுத்தப்படவுள்ளது.
இந்த விண்கலம் ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுகணை ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.