ட்ரம்பின் வர்த்தக போர் : அதிரடி மாற்றம் கண்ட இந்திய தங்க விலை
அமெரிக்காவின் (United States) கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவின் (India) தங்க விலை இனி வரும் நாட்களில் தீவிரமாக உயரும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்த விலையுயர்வு ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும், சீனா (China) மற்றும் கனடா (Canada) ஆகியவை பதிலடி வரிகளை விதித்த காரணத்தால் டொலர் மீதான மதிப்பு குறைந்து உள்ளது.
டொலர் மீதான மதிப்பு
இந்தநிலையில், டொலர் மீதான மதிப்பு குறைவதால் பலரும் 22, 24, 18 கேரட் தங்கத்தில் முதலீடு செய்கின்றமையினால் தங்கம் விலை உயர தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருவதாகவும் டொலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது வர்த்தக போர் தொடங்கினாள் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பான முதலீடு
டொலர் மட்டுமன்றி ரூபாயின் மதிப்பும் குறையுமெனவும் இதனால் மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி செல்வதுடன் தேவை அதிகம் இருக்கும் எனவும் அந்த தேவை காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்க கவலைகள், வர்த்தக போர் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கிகள் பல தங்கத்தை நோக்கி நகர்வது ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயரும் அவலம் ஏற்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பல பணவீக்கம் காரணமாக டொலருக்கு பதில் தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளதுடன் டொலர் கையிருப்பிற்கு பதிலாக தங்கத்தை குவிக்க தொடங்கியுள்ளன.
முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் பதற்றம் காரணமாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளமையினால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்