வெங்காய இறக்குமதி தடையை நீடித்த இந்தியா: பாரிய சிக்கலுக்குள்ளான ஆசிய நாடுகள்
இந்திய அரசு வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, மார்ச் மார்ச் 31-ஆம் திகதி வரை விதிக்கப்பட்டிருந்த வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீடித்துள்ளது.
தடை நீடிப்பு
உலகின் மிகப்பாரிய வெங்காய ஏற்றுமதியாளராக இந்தியாவில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டில் வெங்காயத்தின் உள்ளூர் விலை பாதியாக குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், மறு உத்தரவு கிடைக்கும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெங்காயத்தின் விலை
அதேவேளை, மிகப்பெரிய உற்பத்தியாளரான மகாராஷ்ராவின் சில மொத்த விலை சந்தை வெங்காயத்தின் விலை டிசம்பர் மாதத்தில் 100 கிலோவுக்கு ரூ.4,500 முதல் ரூ.1,200-ஆக குறைவடைந்து காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த தடையினால், இந்தியாவை நம்பியிருந்த பங்களாதேஷ், மலேசியா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |