மொஸ்கோ தாக்குதலின் பின்னணியில் உக்ரைன்: புடின் பகிரங்கம்
மொஸ்கோ கச்சேரி தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு உக்ரைன் உதவி இருக்கலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் புடின் கூறிய விடயமானது, x கணக்கொன்றில் பகிரப்பட்டுள்ளது.
குரோகஸ் கச்சேரி அரங்கு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 133 ஆக உயர்ந்துள்ளதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
தாக்குதல்
அவசரகால சேவைகள் பணியாளர்கள் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி வருவதால், அவர்கள் மேலும் உடல்களைக் கண்டுபிடித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மொஸ்கோவில் "பிக்னிக்" என்ற ராக் இசைக்குழுவின் கச்சேரியில் கலந்துகொண்ட மக்கள் மீதே இந்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட நான்கு குற்றவாளிகள் தற்போது, கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிர நடவடிக்கை
அத்தோடு, அவர்கள் உக்ரைனுடனான எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாகவும் இது தொடர்பான தரவு தம்மிடம் இருப்பதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.
NEW: Vladimir Putin suggests Ukraine was helping the terrorists who conducted the Moscow Concert Hall attack.
— Collin Rugg (@CollinRugg) March 23, 2024
“All the four perpetrators were directly involved who were gunning people down, killing people, were found and apprehended.”
“They were moving towards the border with… pic.twitter.com/APnLEHD6Eh
மேலும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை தீவிரமாக இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினர் என பலரும் செயற்பட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |