மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் - பாகிஸ்தானில் அணு கசிவு...! விரைந்த அமெரிக்க விமானம்
இந்தியாவின் (India) தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத மையம் சேதமடைந்ததாகவும் அணுக்கதிர்கள் கசிய தொடங்கி உள்ளதாகவும் வெளியான செய்தி உலகை ஆட்டம் காண வைத்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கிரானா ஹில்ஸில் உள்ள அணுசக்தி நிலையத்தை இந்திய ஆயுதப் படைகள் தாக்கவில்லை என்பதை விமானப்படை நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி (Air Marshal AK Bharti) தெரிவித்துள்ளார்.
இன்று (12.05.2025) நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிரானா ஹில்ஸில் சில அணுசக்தி நிறுவல்கள் இருப்பதாக எங்களிடம் கூறியதற்கு நன்றி. அது பற்றி எங்களுக்குத் தெரியாது. நாங்கள் கிரானா ஹில்ஸைத் தாக்கவில்லை என்றும் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் விமான தாக்குதலுக்குப் பின் அணுக்கதிர்வீச்சை ஆய்வு செய்யும் திறன்மிக்க D300 அமெரிக்க விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத மையம் சேதமடைந்ததாகவும் அணுக்கதிர்கள் கசிய தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
