இந்திய புலனாய்வை ஒருபோதும் நம்பமாட்டேன்! தலைவர் பிரபாகரனின் முடிவு
எதற்காக இந்தியா இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது?
எதற்காக இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன?
ஈழத் தமிழரைக் காப்பாற்றுவதற்காகவே இந்தியா இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது என்றும், ஈழத்தமிழரைக் காப்பாற்றுவதற்காகவே இந்தியப் படைகளை இலங்கைக்கு அது அனுப்பிவைத்தது என்றும்தான் இன்றைக்கும் பலர் கூறிவருவதை கேட்கக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால், இந்திய இலங்கை ஒப்பந்த விடயத்திலோ அல்லது இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட விடயத்திலோ ஈழத் தமிழரின் நலன் நோக்கமாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
இன்னும் குறிப்பாக கூறப்போனால் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோதும், இந்தியப் படைகள் இலங்கையில் வந்திறங்கிய போதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியா, புதுடில்லியில் அடைத்துவைத்துக்கொண்டுதான் அனைத்தையும் செய்தது.
அதுமட்டுமல்ல, இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கிட்டத்தட்ட ஒரு கைதி போன்றே இந்தியத் தரப்பால் நடாத்தப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 மணி நேரம் முன்
