நாமலுக்கு எதிரான பணமோசடி வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான முறைப்பாட்டின் அடுத்த விசாரணை தொடர்பில் நீதிமன்றம் உத்தரவென்றை பிறப்பித்துள்ளது.
இந்தவகையில் குறித்த வழக்கை ஜூலை 30 ஆம் திகதி நடத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை கொழும்பு தலைமை நீதிபதி முன்பு இன்று (29) விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற விசாரணை
இன்றைய விசாரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மேலும் மூன்று சந்தேக நபர்களும் முன்னிலையாகி இருந்தனர்.
[18BB2G ]
விசாரணையின் போது, வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனை இன்னும் பெறப்படவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்ததையடுத்தே, விசாரணை ஜூலை 30ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த நீதிமன்ற விசாரணைக்குள் சட்ட ஆலோசனையின் நிலை குறித்து நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |