வலுக்கும் காஷ்மீா் விவகாரம்! பேச்சுவாா்த்தை என உள்நுழையும் சீனா
Pakistan
China
India
By pavan
காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என சீனா அறிவுறுத்தியது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கிய நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.
அமைதியான தீா்வு
இது தொடா்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் மாவோ நிங் கூறியதாவது: இந்தியா பாகிஸ்தான் இடையே ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்த பிரச்னைகள் நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.
இதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பிரகடனங்கள் மூலம் அமைதியான முறையில் தீா்வு காண வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை மூலம் உடன்படிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
You May Like This Video
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி