மோடியின் அமெரிக்க பயணம் - அமெரிக்காவில் ஒன்றுகூடிய இலட்சக்கணக்கானோர்
Joe Biden
Narendra Modi
United States of America
India
By Pakirathan
பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஜூன் 21 முதல் 24 வரையிலான காலப்பகுதியில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பிரதமரை வரவேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அமெரிக்கா முழுவதும், குறிப்பாக 20 பெரிய நகரங்களில் இந்திய - அமெரிக்கர்கள் ஒன்று திரண்டு அவரை வரவேற்கும் வகையில் ஒற்றுமை பேரணிகளை நடத்தி உள்ளனர்.
பேரணி
குறித்த பேரணியில் கலந்துகொண்ட மக்கள், இந்திய மற்றும் அமெரிக்க நாட்டு தேசிய கொடிகளை ஏந்தியபடியும், பிரதமர் மோடியின் உருவம் கொண்ட படங்கள் மற்றும் சமூகம் சார்ந்த பதாதைகளை ஏந்தியும் சென்றனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள், மோடி, வந்தே மாதரம் மற்றும் வந்தே அமெரிக்கா உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த பேரணியில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
