இலங்கைக்கு இந்தியா வழங்கிய உறுதி!

Jaishankar Sri Lanka India
By Kathirpriya Oct 12, 2023 07:22 AM GMT
Report

இலங்கைவாழ் மக்களின் வாழ்கையை மேம்படுத்த உதவும் வகையில் இலங்கையில் ஒன்பது அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு மேலதிக நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அதிபர் செயலகத்திற்கு நேற்று (11) விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர்  எஸ். ஜெய்சங்கர் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதாக அதிபர் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, கூடுதல் நிதி வழங்கப்பட உள்ள திட்டங்களுக்கு தற்போது இந்திய அரசு ஆதரவு அளித்து வரும் நிலையில், இதற்கான ஒப்பந்தமும் நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஜெய் சங்கரை சந்திக்க அனுமதி கோரும் தமிழ் கட்சிகள்

ஜெய் சங்கரை சந்திக்க அனுமதி கோரும் தமிழ் கட்சிகள்

மழைநீர் சேகரிப்புத் திட்டம்

வடமாகாணத்தில் 27 பாடசாலைகளினை நவீனமயமாக்கல், மன்னார் மற்றும் அனுராதபுரத்தில் வீடமைப்பு முயற்சிகள், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் மேம்பாடு, பொலன்னறுவையில் பல்லின மும்மொழிப் பாடசாலையை நிர்மாணித்தல், ஆகியவை இந்த திட்டங்களில் அடங்குகின்றது.

இவை  தவிர, யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள், தம்புள்ளை பிரதேசத்தில் மரக்கறிச் செய்கையை ஊக்குவித்தல் மற்றும் பழங்களைப் பாதுகாப்பதற்காக 5000 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட பசுமை இல்ல வசதிகளை நிர்மாணித்தல் ஆகியவையும் இந்த திட்டங்களில் அடங்குகின்றன.

அதிபர் ரணில் தலைமையில்10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

அதிபர் ரணில் தலைமையில்10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கு இந்தியா வழங்கிய உறுதி! | India Ready Provide Additional Funds To Sri Lanka

மேலும், இவற்றுடன் சேர்த்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான புதிய சத்திரசிகிச்சை பிரிவுகளும் உடனடியாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்திய தேசிய பால்வள அபிவிருத்திச் சபை, அமுல் என்ற இந்திய குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் சம்மேளனம் மற்றும் இலங்கையின் கார்கில்ஸ் குழுமம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டுத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் இலங்கையின் உள்ளூர் பால் உற்பத்தித் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்துடன் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

நவீன மயமாக்கல்

முதல் ஐந்து வருடங்களுக்குள் பால் உற்பத்தியை 53% அதிகரிப்பதும், 15 வருடங்களுக்குள் இலங்கைக்கான பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதும் இந்த புதிய திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சுமார் 200,000 உள்ளூர் விவசாயிகள் உயர்தர மருந்துகள், கால்நடை ஊட்டச்சத்து மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்ற வசதிகளை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியா வழங்கிய உறுதி! | India Ready Provide Additional Funds To Sri Lanka

மேலும், இந்த முன்முயற்சியின் மூலம் கால்நடைத் துறை நவீன மயமாக்கல், பால் தொடர்பான துணைப் பொருட்களின் தரத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்தல் மற்றும் மலிவு விலையில் பால் தொடர்பான பொருட்களை அணுகுவதை உறுதி செய்தல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன் பின்னர், இரு நாட்டு அதிகாரிகளும் இந்திய - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

ஒரு வினாடி கூட இந்திய படகுகளுக்கு இடமில்லை: டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!

ஒரு வினாடி கூட இந்திய படகுகளுக்கு இடமில்லை: டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026