வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இந்தியா அளித்த உதவி
அண்மையில் ஏற்பட்ட சீரற்றகாலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இந்தியா(india) நிவாரண உதவிகளை அளித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சார்பில் யாழ்ப்பாணத்தில்(jaffna) உள்ள இந்தியத் தூதரகத் தூதுவர் சாய் முரளி(Shri. Sai Murali), நேற்று(07) எம்பி காதர் மஸ்தானுடன் (Kader Masthan)இந்த உதவிப்பொருட்களை வழங்கி வைத்தார்.
பேசாலை மற்றும் வெள்ளாங்குளம் கிராமங்கள் (மன்னார் மாவட்டம்) மற்றும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு (முல்லைத்தீவு மாவட்டம்) ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,100 குடும்பங்கள் அத்தியாவசிய உதவிகளைப் பெற்றனர்.
கடினமான நேரத்தில் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள்
நிவாரணப் பொதியில் பாய்கள் மற்றும் போர்வைகள் ஆகியவை அடங்கும். இந்த கடினமான நேரத்தில் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இந்த உதவிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன.

அண்டை நாடுகளுக்கு முதலில்” கொள்கை
இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முதலில்” கொள்கையை வலியுறுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்த உதவி பிரதிபலிப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள நிவாரணத்தை உறுதி செய்வதன் மூலம், தேவைப்படும் நேரங்களில் அண்டை நாடுகளுக்கு ஆதரவாக நிற்பதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாக உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 5 மணி நேரம் முன்