பஹ்ரைன் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் : சிறுவர்கள் உட்பட பலர் காயம்
மத்திய கிழக்கில் போர் நிலைமை நீடித்துவரும் நிலையில் பஹ்ரைனில் ஈரான் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஹ்ரைனின் சித்ரா பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு அதில் அறுவை சிகிச்சை தேவைப்படும் சிறுவர்களும் அடங்குவர் என பஹ்ரைன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமான தாக்குதல்
பஹ்ரைன் தலைநகர் மனாமாவுக்குத் தெற்கே அமைந்துள்ள சித்ரா பகுதியை இலக்கு வைத்து ஈரான் இந்த ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் நிலவி வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |