இலங்கையை சீர்குலைக்கும் நடவடிக்கை - நாடு திரும்பாத இந்திய புலனாய்வாளர்கள் வெளியாகிய பின்னணி
இலங்கையில் தொடர்ச்சியாக இந்தியா தனது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆனால் இலங்கை, இந்தியாவில் இவ்வாறான செயற்பாடுகளை செய்யவில்லை என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியாவின் புலனாய்வு
இதன் போது கருத்து தெரிவித்த அவர், இந்தியாவின் ரோ அமைப்பை சேர்ந்த புலனாய்வாளர் பத்திரிக்கை ஒன்றிற்கு இந்தியாவின் புலனாய்வு தொடர்பான பல விடயங்களை கூறி இருந்தார் என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தியா தன்னை சூழவுள்ள நாடுகளான இலங்கை,பங்களாதேஷ், பாக்கிஸ்தான், நேபாளம் போன்ற பல நாடுகளை எவ்வாறு கண்காணிக்கிறது, அவர்களின் அரசியலில் எவ்வாறு தலையிடுகின்றது என கூறியுள்ளார்.
மேலும் குறித்த புலனாய்வாளர் இலங்கையில் பல வருடங்களாக புலனாய்வு வேலையில் ஈடுபட்டவர் எனவும் ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு தான் இந்தியா அவரை அழைத்தது எனவும் கூறியுள்ளார்.
மீண்டும் ராஜபக்சக்களை ஆட்சிக்கு
அதேபோன்று 2017 ஆம் ஆண்டு மோடியுடன் சென்ற பல புலனாய்வாளர்கள் இந்தியாவிற்கு திரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தும் முகமாக கருத்துக்களை வெளியிட்டனர். இதேவேளை மீண்டும் 2019 ஆம் ஆண்டு குறித்த புலனாய்வாளர் இலங்கைக்கு வந்ததாகவும் அதன்போது அவருக்கு வழங்கப்பட்ட வேலை மீண்டும் ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதாகும் எனவும் அதை அவர்கள் கச்சிதமாக முடித்துவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களை குறிவைத்து தான் இவர்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
புலனாய்வு துறை ஊடாக இலங்கையில் யாருக்கெல்லாம் நிதி வழங்கினார்கள் என்பதையும் அவர்கள் கூறிய விடயங்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இலங்கையை சீர்குலைக்கின்ற நடவடிக்கை
அதற்கமைய அரசியல்வாதிகள், மத தலைவர்கள், ஊடகவியலாளர்கள், இராணுவம் என பல தரப்பினருக்கு, அவர்களுக்காக இயங்க வேண்டும் என நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
முக்கியமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் இலங்கையை சீர்குலைக்கின்ற நடவடிக்கையில் இறங்குமாறு கூறப்பட்டதாகவும் கூறப்பட்டது .
இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் குறித்த புலனாய்வாளர் இந்த தகவல்களை வெளியிட்ட சில வாரங்களிலே பழ.நெடுமாறன் விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.”என தெரிவித்துள்ளார்.
