2024 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியல்: இடம்பெறாத முக்கிய வீரர்
20 அணிகள் பங்கேற்கும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை இந்தியா வெளியிட்டுள்ளது.
இந்த கிரிக்கெட் தொடரானது, அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 1 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைவராக ரோகித் சர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பெயர் பட்டியல்
அதன்படி, வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள இந்திய வீரர்களின் பெயர்கள், “ரோஹித் சர்மா(c), விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ், ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான்.” என்பவர்கள் ஆவர்.
🚨India’s squad for ICC Men’s T20 World Cup 2024 announced 🚨
— BCCI (@BCCI) April 30, 2024
Let's get ready to cheer for #TeamIndia #T20WorldCup pic.twitter.com/jIxsYeJkYW
எனினும், குறித்த அணியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |