ஆரம்பமானது இலங்கை - இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சி!
இந்திய - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ர சக்தி (MITRA SHAKTI) இன் 10வது அத்தியாயம் இலங்கையில் (Sri Lanka) ஆரம்பமாகியுள்ளது.
மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சி பாடசாலையில் நேற்று (12) ஆரம்பமாகிய இந்த பயிற்சியானது, எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், இரு தரப்புகளின் இராணுவத் திறனை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமென கூறப்படுகின்றது.
ஆயுதப் படை
குறித்த கூட்டு இராணுவப் பயிற்சியானது கடந்த வருடம் இந்தியாவில் இடம்பெற்றது.
அந்தவகையில், இவ்வருடம் இலங்கையில் நடைபெறும் பயிற்சியில், இந்தியாவை (India) பிரதிநிதித்துவப்படுத்தி ராஜ்புதானா ரைபிள்ஸ் (Rajputana Rifles ) மற்றும் பிற ஆயுதப் படைகளை சேர்ந்த 106 படையினரும், சிறிலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் (Gajaba Regiment of Sri Lankan Army) வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
