இந்தோ - லங்கா பிரச்சினை! கைது செய்வதே தீர்வு - டக்ளஸ் தேவானந்தா
இந்தோ – லங்கா மீன்பிடி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஸ்ரீலங்காவின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கடலில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குவேன் என்ற கூற்று தவறானது என்றும் இது ஒரு மீன் வள அமைப்பொன்றின் ஒரு யோசனை மட்டுமே என்றும் இறுதி முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் ஸ்ரீலங்கா கடலுக்குள் நுழைவதால் குறிப்பாக கீழடி பயணத்தால் கடல் படுகைகள் அழிவடைகின்றன.
ஸ்ரீலங்கா கடலுக்குள் நுழையும் அனைத்து இந்திய மீனவர்களையும் தொடர்ந்து கைது செய்ய கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் மீனவர்கள் மற்றும் மீனவர் அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னரே மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.