தமிழகத்தில் கரும்பூஞ்ஞை நோயால் முதல் பலி
india
corona
death
tamil nadu
By Sumithiran
தமிழகத்தில் கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று (20) உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டஅல்லது கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் கரும்பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நோயின் தாக்கத்தால் தமிழகத்தில் முதல் பலி பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த 57 வயதான வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 17ஆம் திகதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று (மே 20) உயிரிழந்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்