இந்திய – தமிழீழப் போர் ஆரம்பமானது

MGR Tamils LTTE Leader Liberation Tigers of Tamil Eelam Indian Peace Keeping Force
By Niraj David Jan 20, 2024 02:14 PM GMT
Niraj David

Niraj David

in சமூகம்
Report

1987ஆண்டு ஐப்பசி மாதம் 10ம் நாள் இந்திய – தமிழீழப் போர் ஆரம்பமானது. அந்தப் போரை இந்தியாவே ஆரம்பித்தும் வைத்தது.

இந்தியா ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை ஆரம்பித்துவிட்டது என்று தெரிவித்து, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்  தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார்.

அக்டோபர் 10 இல், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பித்திருந்த மறு நாள், அதாவது 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்தியா தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை எவ்வாறு ஆரம்பித்திருந்தது என்று விபரித்திருந்தார்.

பிரபாகரன் எழுதிய கடிதம்

பிரபாகரன்  அந்தக் கடிதத்தில் இந்தியாவின் நகர்வுகள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

‘எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின.இன மோதல்கள் வெடித்தன.

இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது.

இந்திய – தமிழீழப் போர் ஆரம்பமானது | India Tamileelam War Ltte Prabakaran Mgr Sri Lanka

இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி பந்த், இந்திய தூதுவர்  தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சுந்தர்ஜீ ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா அதிபர் ஜயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையென்றும் ஐயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக பந்த் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது.

1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகைக் (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர்.

பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர். அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர்.

அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம். போர் மூண்டது. இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர்.

தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை, விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம். நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காக போராடி வருகிறோம்.

இந்திய – தமிழீழப் போர் ஆரம்பமானது | India Tamileelam War Ltte Prabakaran Mgr Sri Lanka

உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிட போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைத்த அவசரக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

புலிகளுக்கு எதிரான யுத்தம்

ஈழ தேசம் அதிர்ச்சிக்குள்ளானது. இதேபோன்று, இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, சென்னையில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை ஒரு புத்தகத்தை வெளியிட்டது.

Yoo too India? (இந்தியா.. நீ கூடவா?) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த புத்தகத்திலும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியா எப்படி ஆரம்பித்திருந்தது என்பது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

“விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களும் மறைந்த தமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கையில், இந்திய அரசோ, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பாரிய அழித்தொழிப்பு யுத்தத்தை மேற்கொள்ளுவதற்கு தனது அமைதிகாக்கும் படையை ஏவியிருந்தது.

இந்திய – தமிழீழப் போர் ஆரம்பமானது | India Tamileelam War Ltte Prabakaran Mgr Sri Lanka

‘இந்தியப் படையினருக்கு எதிரான யுத்தம் என்பது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழ் மக்களும் தமது கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா அவர்களது உற்ற நண்பன்.

அவர்களது ஒரே பாதுகாவலன். ஈழ மண்ணில் இந்தியப் படைகளின் பிரசன்னம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அன்பினதும், சமாதானத்தினதும் சின்னமாகவே நோக்கப்பட்டு வந்தது.

அதேவேளை, விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையிலும் இந்தியாவை அவர்களது ஊக்கு சக்தியாகவே அவர்கள் நோக்கி வந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கான பாதுகாப்பையும், ஆயுத உதவிகளையும் வழங்கக்கூடிய ஒரு நட்பு சக்தியாகவே அவர்கள் இந்தியாவை நோக்கி வந்தார்கள்.

இப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா யுத்தம் புரிய ஆரம்பித்த போது ஈழ தேசமே அதிர்ச்சிக்குள்ளானது.இவ்வாறு அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திபிந்தர் சிங் தீட்டிய திட்டம்

விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளின் இறுதி திட்டங்களை இந்தியப் படைகளின் தென் பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்.

பலாலி விமானப்படைத் தளத்தில், இந்தியப்படை உயரதிகாரிகள் மத்தியில் இந்தியப்படைகளின் நகர்வுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தமது திட்டங்களுக்கு அவர் இறுதி வடிவம் வழங்கிக்கொண்டிருந்தார்.

கண்களில் ஆர்வம் பொங்கவும், வெற்றி உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியிலும் இந்தியப்படை அதிகாரிகள், தளபதியின் திட்டங்களைச் செவிமடுத்தபடி நின்றார்கள். புலிகளின் தலைவரையும், யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றுவதற்கு இந்தியப் படையணிகள் தயார் நிலையில் நின்றன.

யாழ் நடவடிக்கைகளுக்கான பொறுப்புக்கள், இந்திய இராணுவத்தின் 54வது டிவிஷன் படையணிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்திய – தமிழீழப் போர் ஆரம்பமானது | India Tamileelam War Ltte Prabakaran Mgr Sri Lanka

கள நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவத்தின் பின்வரும் படையணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

18வது காலாட் படைப்பிரிவு. 41வது காலாட் படைப்பிரிவு. 72வது காலாட் படைப்பிரிவு. 91வது காலாட் படைப்பிரிவு. 115வது காலாட் படைப்பிரிவு. 65வது கவச வாகனப் பிரிவு. 831வது இலகு மோட்டார் படைப்பிரிவு. 25வது படைப்பிரிவு 10வது பரா கொமாண்டோ படைப்பிரிவு என்பன புலிகளுடனான யுத்தத்திற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றிற்கு மேலதிகமாக, 13வது சீக்கிய கொமாண்டோ அணியினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

குவிக்கப்பட்டிருந்த இந்திய ஜவான்கள் முன்நிலையில் தமது தாக்குதல் திட்டத்தை விபரித்த திபீந்தர் சிங், ‘இரண்டு நாட்களுக்குள் இந்தியப் படை தமது பிரதான நோக்கத்தை நிறைவு செய்துவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

அங்கு திரண்டிருந்த இந்தியப்படை வீரர்களும், புலிகளுடனான தமது யுத்தம் இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்துவிடும் என்று உறுதியாகவே நம்பினார்கள்.

“ஜெய்ஹிந் என்று வெற்றிக் கோஷமிட்டார்கள். அவர்களின் கோஷம் வானை எட்டும்படியாக இருந்தது. ஆனால், இவ்வாறு வெற்றிக் கோஷம் இட்ட இந்திய ஜவான்களில் பலர் அடுத்த இரண்டு நாட்களில் அநியாயமாக தமது உயிர்களை இழக்க இருந்தது, பாவம் அவர்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

தமது தளபதி கூறியது போன்று இரண்டு நாட்களில் மட்டுமல்ல இரண்டு வருடங்கள் கடந்தும் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்ற உண்மையும் அவர்களுக்கு அப்பொழுது புரிந்திருக்கவில்லை. அந்த உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்டபோது காலம் கடந்துவிட்டிருந்தது.

தோல்விகண்ட வல்லரசுகள்

தோல்விகண்ட வல்லரசுகள்

ஆரம்பித்தது- புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை

ஆரம்பித்தது- புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி